வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக மாணவர்கள் மத்தியில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக மாணவர்கள் மத்தியில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக மாணவர்கள் மத்தியில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் எளிதில் வடிந்து செல்ல ஏதுவாக நகரின் பிரதான வடிகால்கள், நீர் வழித்தடங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தல், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மின்மோட்டார் பம்ப் , மணல் மூட்டைகள் ஆகியவற்றை தயார் தயார் நிலையில் வைத்தல், அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் ,கிருமி நாசினிகள் இருப்பு வைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 

இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் உத்திரவிடப்பட்டதன் பேரில் மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் திருமதி . மதுமிதா அவர்களின் தலைமையில் மை பாரத் கேந்திராவை சார்ந்த திரு. செல்வ லிங்கம், இளம் பேரிடர் நண்பன் அமைப்பைச் சார்ந்த திரு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்படி விழிப்புணர்வு 

 நிகழ்ச்சியானது சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினமான இன்று (13/10/2026)– ஜின் பாக்டரி ரோட்டில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பேரிடர்களை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க முடியும். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முறையான திட்டமிடல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது.

வெள்ளம், புயல், நிலநடுக்கம், காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் 

அவசர காலங்களுக்கான பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரித்தல், முதலுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல், அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றுதல், நம்பகமான தகவல்களைப் பெறுதல் ஆகியவை பேரிடர் மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிப்பது குறித்தும்.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

 சிறிய அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரிய அளவிலான பாதிப்புகளைத் தவிர்க்க உதவும் எனவும், குறைந்த பேரிடர் அபாயம் – பாதுகாப்பான வாழ்க்கை – வலுவான எதிர்காலம்’ என்ற நோக்கத்துடன், பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.